ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தெற்கு பகுதியில் சோபியான் மாவட்டம் உள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டதில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களும், மாநில போலீசாரும் இணைந்து இன்று காலை அந்த பகுதிக்குள் நுழைந்தனர்.

பாதுகாப்பு படை வீரர்களை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களை தேடும் வேட்டையில் பாதுகாப்பபு படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com