பாலக்காட்டில் ஐயப்பன் கோவில் குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

பாலக்காட்டில் ஐயப்பன் கோவில் குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாலக்காட்டில் ஐயப்பன் கோவில் குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
Published on

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நூரணியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் பரமேஷ்வரன் (வயது 14). அதே பகுதியை சேர்ந்த நீலகண்டனின் மகன் நாராயணன் (14). இவர்கள் இங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று நூரணி ஐயப்பன் கோவில் குளத்தில் குளிக்க சென்றனர். இவர்களுடன் முருகேசன், ஜெயராம் ஆகிய மாணவர்களும் குளித்தனர். திடீரென பரமேஷ்வரனும், நாராயணனும் ஆழமான பகுதிக்குள் சென்று விட்டனர். தங்களை காப்பாற்றும்படி சத்தம்போட்டனர்.

மற்ற பகுதியில் இருந்து முருகேசனும், ஜெயராமும் சத்தம்போட்டு பொது மக்களை கூட்டினர். பின்னர் இது குறித்து பாலக்காடு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து குளத்தில் மூழ்கிய 2 மாணவர்களையும் மீட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர் மாணவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து பாலக்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com