சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களுடனான துப்பாக்கி சண்டையில் 2 பாதுகாப்பு படைவீரர்கள் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களுடனான துப்பாக்கி சண்டையில் இன்று 2 பாதுகாப்பு படைவீரர்கள் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களுடனான துப்பாக்கி சண்டையில் 2 பாதுகாப்பு படைவீரர்கள் உயிரிழப்பு
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தின் பல பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் பணியில் மத்திய படை போலீசார் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இங்குள்ள சுக்மா, பிஜப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடிக்கடி பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று அதிகாலை சுக்மா மாவட்டத்தில் உள்ள பேஜ் பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளை நோக்கி போலீசார் சுட தொடங்கினர். போலீசாரை கண்டதும் மாவோயிஸ்ட்களும் தங்களிடம் இருந்த துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.

இந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com