

பழனி:
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மணிகண்டன் (வயது 15). வேலு மகன் பாபு (14). இவர்கள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
நேற்று பள்ளிக்கு கிளம்பிய அவர்கள் தாமதமாக சென்றதால் ஆசிரியர்கள் திட்டுவார்கள் என்று பயந்து நெல்லை பஸ்நிலையம் வந்தனர். பின்னர் அங்கிருந்து பஸ் மூலம் மாறி மாறி பழனிக்கு வந்தனர்.
பழனியில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு இரவில் எங்கு செல்வது என்று தெரியாமல் பழனி ரெயில் நிலையத்தில் தவித்துக் கொண்டு இருந்தனர். இருவரையும் ஏ.எஸ்.ஐ. பாலசுப்பிரமணி தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் அழைத்து விசாரணை நடத்தினர். அதில் மேற்கண்ட விஷயங்களை மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இரவு தங்கள் பாதுகாப்பிலே வைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இன்று அதிகாலை பெற்றோர் பழனி ரெயில் நிலையம் வந்து மாணவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டுச் சென்றனர்.