தேனி அருகே 2 பள்ளி மாணவிகள் மாயம்

தேனி அருகே மாயமான 2 பள்ளி மாணவிகளை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மாணவிகள் மாயம்
மாணவிகள் மாயம்
Published on

தேனி:

தேனி அருகே பழனி செட்டிப்பட்டியைச் சேர்ந்த ஆசை குமார் மகள் மீனா (வயது 15). இவர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறையன்று வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார்.

அவரது தந்தை தோட்டத்துக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மகளை காணவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மீனாவை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

சின்னமனூர் அருகே சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்தவர் சின்னச்சாமி மகள் சங்கீதா (வயது 17). இவர் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மதுரையில் உள்ள தனது தோழி வீட்டு விசே‌ஷத்தில் கலந்து கொள்ள சென்றார்.

இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com