கடையம் அருகே குளத்தில் மணல் அள்ளிய 2 பேர் கைது - டிராக்டர், ஜே.சி.பி. இயந்திரம் பறிமுதல்

கடையம் அருகே குளத்தில் மணல் அள்ளிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து டிராக்டர், ஜே.சி.பி. இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கடையம் அருகே குளத்தில் மணல் அள்ளிய 2 பேர் கைது - டிராக்டர், ஜே.சி.பி. இயந்திரம் பறிமுதல்
Published on

கடையம்:

கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூர் குளம் பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருப்பதாக கடையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து விரைந்து சென்ற போலீசார் குளத்தில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 2 பேரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் கடையம் அருகே உள்ள முப்பிலியூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த சிவன் வைத்திலிங்க ராஜா(வயது 26), புலவனூர் பொன்மலைநகரை சேர்ந்த முத்துகுமார்(25) என தெரியவந்தது. இதையடுத்து வைத்திலிங்கராஜா, முத்துகுமாரை கைது செய்த போலீசார் டிராக்டர், ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com