அம்பை அருகே 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அம்பை அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
குண்டர் சட்டம்
குண்டர் சட்டம்
Published on

நெல்லை:

அம்பை அருகே உள்ள பொட்டல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தவசி ராஜன் மகன் பிரபாகரன் (வயது 22). இவர் கல்லிடைக்குறிச்சி பகுதியில் சட்ட விரோதமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வந்தார் கல்லிடைக்குறிச்சி போலீசார் பிரபாகரனை ஏற்கனவே கைது செய்து நாங்குநேரி பாஸ்டர் பள்ளியில் அடைத்தனர்.

அதேபோல் சேரன்மாதேவி செல்லி பாறை தெருவை சேர்ந்த அய்யாத்துரை மகன் தனசுந்தர் என்ற சுந்தர் (19) , என்பவர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்ததால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரையின் பேரில் பிரபாகரன், சுந்தர் ஆகியோரை மாவட்ட கலெக்டர் ஷில்பா குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 

இதையடுத்து சிறையிலிருக்கும் அவர்களிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆவணங்களை போலீசார் சமர்ப்பித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com