கள்ள ரூபாய் நோட்டு மாற்ற முயன்ற 2 பேர் பிடிபட்டனர்

ஆத்தூர் அருகே கள்ள ரூபாய் நோட்டு மாற்ற முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கள்ள நோட்டை பறிமுதல் செய்தனர்.
கள்ள ரூபாய் நோட்டு மாற்ற முயன்ற 2 பேர் பிடிபட்டனர்
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மல்லியகரை பகுதியில் நேற்று மதியம் சந்தேகப்படும் படியாக இரண்டு பேர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு கடைகளில் பொருள் வாங்குவது மற்றும், சில்லரை கேட்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அவர்கள் மீதும், அந்த நபர்கள் கொடுத்த ரூபாய் நோட்டுகள் மீதும் சந்தேகம் அடைந்த வியாபாரிகள் இரண்டு பேரையும் பிடித்து மல்லியகரை போலீசில் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து மல்லியகரை போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களில் ஒருவர் சிவகங்கை என்றும், மற்றொருவர் திருச்சி என்றும் மாறி, மாறி உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து மேல் விசாரணை நடந்து வருகிறது. இதில் மேலும் 3 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவர்களை பிடித்தபிறகு தான் கள்ள ரூபாய் நோட்டு கும்பல் ஒட்டுமொத்தமாக கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com