அம்பத்தூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 2 பேர் உயிரிழப்பு

சென்னை அம்பத்தூரில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். #TrainRunsOver #ChennaiTrainAccident
அம்பத்தூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 2 பேர் உயிரிழப்பு
Published on

சென்னை:

அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே இன்று சிலர் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த வழித்தடத்தில் வந்தது. தண்டவாளத்தை கடந்து சென்றவர்கள் சுதாரிப்பதற்குள் அவர்கள் மீது ரெயில் மோதியது.  இதில் 2 பேர் உயிரிழந்தனர்.

ரெயில் நிலையங்களில் தண்டவாளத்தை கடப்பதற்கு உயர்மட்ட பாலங்கள் இருந்தாலும் பலர் அதனை பயன்படுத்தாமல், தண்டவாளத்தின் வழியாகவே நடந்து சென்று பாதையைக் கடக்க முற்படுகின்றனர். சிக்னலுடன் கூடிய கேட்டுகள் மூடியிருக்கும்போதுகூட பொறுமையாக நிற்காமல், குறுக்கே நடந்து செல்கின்றனர். இதனால் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. #TrainRunsOver #ChennaiTrainAccident

X

Maalai Malar
www.maalaimalar.com