கோவை ரயில் நிலைய பார்சல் அலுவலக மேற்கூரை சுவர் இடிந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு

கோவை ரயில் நிலையத்தில் மழை காரணமாக பார்சல் அலுவலக மேற்கூரையும், சுவரும் இடிந்து விழுந்து விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
கோவை ரயில் நிலைய விபத்து
கோவை ரயில் நிலைய விபத்து
Published on

கோவை:

கோவை ரயில் நிலையத்தில் மழை காரணமாக பார்சல் அலுவலக மேற்கூரையும், சுவரும் இடிந்து விழுந்து விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

கோவை ரயில் நிலையத்தில் பார்சல் அலுவகம் இயங்கி கொண்டுள்ளது.  இதனிடையே கோவையில் பெய்து வரும் மழை காரணமாக கோவை ரயில் நிலையத்தில் பார்சல் அலுவலக மேற்கூரையும்,  சுவரும் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 4 நபர்களை மீட்பு பணியினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த மீட்புபணியில் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் தலைமையில் 50 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்த பவளமணி மற்றும் இப்ராகிம் சிகிச்சை இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

X

Maalai Malar
www.maalaimalar.com