திருவேங்கடம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற 2 பேர் கைது

திருவேங்கடம் அருகே உள்ள சின்னகாளாம் பட்டியில் உள்ள காளியம்மன்கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவேங்கடம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற 2 பேர் கைது
Published on

சங்கரன்கோவில்:

திருவேங்கடம் அருகே உள்ள சின்னகாளாம் பட்டியில் உள்ள காளியம்மன்கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வெளியூரிலிருந்து அங்கு வந்து தங்கியிருந்து விழாவை கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் கோவில் உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு சென்று பார்த்த போது 2 பேர் உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரிக்கும் போது அவர்கள் மதுரை அழகர்நகர் பகுதியை சேர்ந்த பூவரசன் (21), மற்றும் அதே ஊரை சேர்ந்த ராஜதுரை (22) என தெரியவந்தது.  

அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் சம்பவம் பற்றி ஊர் நாட்டாண்மை பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த திருவேங்கடம் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com