மோட்டார் சைக்கிளில் உலகை சுற்றிய 2 பேர் மெக்சிகோவில் படுகொலை

மோட்டார் சைக்கிளில் உலகை சுற்றிய 2 பேர் மெக்சிகோவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் உலகை சுற்றிய 2 பேர் மெக்சிகோவில் படுகொலை
Published on

மெக்சிகன்சிட்டி:

ஜெர்மனியை சேர்ந்தவர் ஹோல்கர் ஹஜன்புஷ்க். போலந்து நாட்டை சேர்ந்தவர் கிறிஸ்டோப் சிமெல்ஸ்கி. இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் உலக நாடுகளை சுற்றி வந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பயணத்தை தொடங்கினர்.

சமீபத்தில் மெக்சிகோவில் பயணம் மேற்கொண்டனர். அப்போது சியாபாஸ் மாகாணத்தில் ஒரு மலை பள்ளத்தாக்கில் மோட்டார் சைக்கிளுடன் பிணமாக கிடந்தனர். இவர்கள் விபத்தில் பலியானதாக கூறப்பட்டது.

உடலில் காயங்கள் இருந்ததை தொடர்ந்து சந்தேகம் அடைந்த மெக்சிகோ அரசு இது குறித்து சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையில் இவர்கள் கொலை செய்யப்பட்டு பள்ளத்தாக்கில் பிணம் வீசப்பட்டது தெரிய வந்தது. மேலும் இவர்களது பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எனவே பணத்துக்காக இவர்கள் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com