பெண்கள் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க இரண்டு புதிய விருதுகள்- பிபா அறிவிப்பு

உலகம் முழுவதும் பெண்களுக்கான கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு புதிய விருதுகளை பிபா அறிவித்துள்ளது. #FIFA #FootballAwards #WomensFootball
பெண்கள் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க இரண்டு புதிய விருதுகள்- பிபா அறிவிப்பு
Published on

சூரிச்:

உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களைக் கொண்ட கால்பந்து விளையாட்டுக்கு ஊக்கம் அளித்து பிரபலப்படுத்தும் வகையில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகளை தேர்வு செய்து பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.

அவ்வகையில், பெண்களுக்கான கால்பந்து விளையாட்டை மேலும் ஊக்குவிக்கும் வகையில், இரண்டு புதிய விருதுகளை பிபா அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டில் இருந்து சிறந்த பெண் கோல்கீப்பர், சிறந்த பெண்கள் அணி ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. வரும் செப்டம்பர் 23-ம் தேதி மிலன் நகரில் நடைபெறும் பிபா விருது வழங்கும் விழாவில், பெண்கள் பிரிவில் தேர்வு செய்யப்படும் வீராங்கனைகள் இந்த விருதுகளைப் பெற உள்ளனர்.

சிறந்த  வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஆண் பயிற்சியாளர், சிறந்த பெண் பயிற்சியாளர், சிறந்த ஆண் கோல்கீப்பர், சிறந்த பெண் கோல் கீப்பர், சிறந்த ஆண்கள் அணி, சிறந்த  பெண்கள் அணி, சிறந்த கோலுக்கான புஸ்காஸ் விருது, ஃபேர் பிளே விருது, ரசிகர்களின் விருது என மொத்தம் 11 பிரிவுகளில் பிபா விருதுகள் வழங்கப்படுகின்றன. #FIFA #FootballAwards #WomensFootball

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com