சத்தீஸ்கரில் சிறப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறப்பு படையினர் இன்று நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ராய்பூர்:

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். 

பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை வேட்டையாட மாநில தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள சின்டல்நர் காட்டுப்பகுதியில் சிறப்பு படையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள் சிறப்பு படையினர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நக்சலைட்டுகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிறப்பு படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com