மகாராஷ்டிரா - போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்

மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதியில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்கவுண்டரில் போலீசார்
என்கவுண்டரில் போலீசார்
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள நர்காசா காட்டுப் பகுதியில் நக்சலைட்கள் சிலர் பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அங்கு சென்ற போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நக்சல்களின் தாக்குதலுக்கு போலீசாரும் சரமாரி சுடத்தொடங்கினர். இந்த தாக்குதலில் 2 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com