ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் - பழ வியாபாரி பலி

ராஜாக்கமங்கலம் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பழ வியாபாரி பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). பழ வியாபாரி.

இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் ராஜாக்கமங்கலம் பஜாருக்கு வந்தார். அப்போது எதிரே வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதின.

இதில் தூக்கிவீசப்பட்ட மணிகண்டனுக்கு படுகாயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் தங்க நாடார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தது மணவாளக்குறிச்சியை அடுத்த பரப்பற்று பகுதியை சேர்ந்த நிதிஷ் (22) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com