காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டை - இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #MilitantsKilled
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்துக்குட்பட்ட கிரால்ஹார் பகுதி வழியாக ஒரு கார் சந்தேகத்துக்கிடமான வகையில் வேகமாக வருவதை கண்ட பாதுகாப்பு படையினர் அந்த காரை நிறுத்தி சோதனையிட முயன்றனர்.