வாலிபர்களை நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் சென்ற கிராம மக்கள்

அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை கிராமத்தினர் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாலிபர்களை நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் சென்ற கிராம மக்கள்
Published on

கவுகாத்தி:

அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் அப்பர் சியாங் மாவட்டத்தில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அம்மாவட்டத்தில் உள்ள யிங்கியாங் கிராமத்தைச் சேர்ந்த 17-வயது பள்ளி மாணவியை அவளது காதலன் உட்பட நான்கு பேர் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலியல்  பலாத்காரம் செய்துள்ளனர்.

இது குறித்து தெரிய வந்ததும் மாணவி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கிராமத்தினருடன் இணைந்து சம்பந்தப்பட்ட வாலிபர்களுக்கு தண்டனை அளிக்க விரும்பினர். ஆனால் 2 பேர் மட்டுமே பிடிபட்டனர். மற்ற 2 பேர் தலைமறைவாகினர்.

இதையடுத்து, கிராமத்தினர் பிடிபட்ட 2 பேரையும் அடித்து ஊரைச் சுற்றி நிர்வாணமாக நடக்க வைத்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், தலைமறைவான இரண்டு பேரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகமாகி வரும் நிலையில், பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்களுக்கு கிராமத்தினர் அளித்த தண்டனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com