ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப் முகாமை தாக்கிய லஷ்கர் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகரில் உள்ள சி.ஆர்.பி.எப் முகாமில் நேற்று தாக்குதல் நடத்திய லஷ்கர் இ தாய்பா இயக்க தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப் முகாமை தாக்கிய லஷ்கர் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை
Published on

ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள கரன்நகரில் சி.ஆர்.பி.எப் முகாம் உள்ளது. நேற்று காலை இங்கு நுழைந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தியதும் தப்பி ஓடிவிட்டனர். 

தீவிரவாதிகளின் தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வீரர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து, தப்பி ஓடிய தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தாக்குதல் நடத்திய இரு தீவிரவாதிகள் இன்று சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் ஐ.ஜி தெரிவித்துள்ளார். அவர்கள் லஷ்கர் இ தாய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.

கொல்லப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #JammuAndKashmir #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com