ஜெர்மன்: இரவு விடுதியில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி

ஜெர்மன் நாட்டில் உள்ள இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.
ஜெர்மன்: இரவு விடுதியில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி
Published on

ஜெர்மன் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது கான்ஸ்டன்ஸ் நகரம். இங்குள்ள  இரவு விடுதியில் இன்று காலை இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது சுமார் 34 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இரவு விடுதியில் நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்.

இந்த திடீர் தாக்குதலில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதைதொடர்ந்து, போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com