சயான், மனோஜுக்கு 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் - உதகை நீதிமன்றம் உத்தரவு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கைதான சயான் மற்றும் மனோஜுக்கு 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உதகை நீதிமன்றம் உத்தரவிட்டது. #Kodanadu #ManojSayan
சயான், மனோஜுக்கு 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் - உதகை நீதிமன்றம் உத்தரவு
Published on

சென்னை:

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையின்போது மனோஜ் மற்றும் சயான் ஆகியோர் உதகை நீதிமன்றத்தில் முன்னர் ஆஜராகாததால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்துசெய்த நீதிமன்றம் அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருந்தது.

அவர்களை கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, உதகை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மனோஜ் மற்றும் சயான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், அவர்கள் இருவரையும் கடந்த 25ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்தது. சயான் மற்றும் மனோஜ் இருவரும் சென்னை, மும்பை ஆகிய பகுதிகளில் நடமாடி வந்ததை போலீசார் கண்காணித்தனர்.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட தனிப்படை போலீசார் சயான் மற்றும் மனோஜை கேரளாவில் நேற்று கைது செய்தனர். அவர்கள் இருவரையும் நேற்று இரவு உதகை கொண்டு வந்தனர். இன்று காலை இருவரையும் போலீசார் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதி பி.வடமலை இருவரையும் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். #Kodanadu #ManojSayan

X

Maalai Malar
www.maalaimalar.com