காஷ்மீர்: தீவிரவாதிகளின் மறைவிடங்களை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் த்ரால் என்ற பகுதியில் ஜெய்ஸ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் பயன்படுத்தி வந்த இரண்டு மறைவிடங்களை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
காஷ்மீர்: தீவிரவாதிகளின் மறைவிடங்களை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு வந்தனர். த்ரால் என்ற பகுதியில் தீவிரவாதிகள் பயன்படுத்தி வந்த இரண்டு மறைவிடங்களை பாதுகாப்பு படையினர் இன்று கண்டறிந்து அதை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

மறைவிடங்களில் இருந்த ஆவணங்கள் மூலம் ஜெய்ஸ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் பயன்பாட்டில் இந்த குழி இருந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், அங்கிருந்து சில ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும், அப்பகுதியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com