இருவேறு சம்பவங்கள்: மனைவி இறந்த ஏக்கத்தில் முதியவர்கள் தற்கொலை

மதுரையில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் மனைவி இறந்த ஏக்கத்தில் 2 முதியவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
இருவேறு சம்பவங்கள்: மனைவி இறந்த ஏக்கத்தில் முதியவர்கள் தற்கொலை
Published on

மதுரை:

மதுரை திலகர் திடல் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 75). 3 வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார்.

மனைவி இறந்த ஏக்கத்தில் இருந்து வந்த பாண்டியன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திலகர் திடல் போலீசார் விசாரணை நடத்தினர்.

எல்லீஸ்நகர் பழைய காலனியைச் சேர்ந்தவர் ராஜூ (60). இவரது மனைவி 4 வருடங்களுக்கு முன்பு இறந்தார். இதனால் ராஜூ மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார். நேற்று காலை ராஜூ காந்தி மியூசியம் அருகில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

தீக்காயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ராஜூ பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com