மெக்சிகோ எல்லையில் உருவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இருவர் பலி

மெக்சிகோவின் எல்லைப் பகுதியில் உள்ள காட்டிமலாவின் மேற்கு பகுதியில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இருவர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோ எல்லையில் உருவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இருவர் பலி
Published on

மெக்சிகோவின் எல்லைப் பகுதியில் உள்ள காட்டிமலாவின் மேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நேற்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.9-ஆக பதிவாகியது.  இந்த நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சான் செபாஸ்டியன் கிராமத்தில் உள்ள தேவாலயம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவரும், நிலநடுக்க அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மின்தடையும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதுடன், பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காட்டிமலா நகரத்தில் இருந்து 156 கிலோமீட்டர் தூரத்தில் சான் மைக்ரோசை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காட்டிமலாவை மையமாக வைத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், மெக்ஸிகோ உள்ளிட்ட அருகாமை நகரங்களிலும் எதிரொலித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com