

ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரில் உள்ள இந்திரா காலணியில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பாராகிளைடர் நேற்று தரையிறங்கும் போது குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பாராகிளைடரில் பைலட் உட்பட 3 பேர் பயணம் செய்தனர். பாராகிளைடரின் பைலட்டாக டெல்லியைச் சேர்ந்த மானவ் மேவரா என்பவர் இருந்துள்ளார். இந்த விபத்தில் மானவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவுரவ் பதி உள்ளிட்ட 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
பாராகிளைடர் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அந்நிறுவனம் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாதது தான் விபத்திற்கு காரணம் என கருதப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews