ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் - 2 பிஎஸ்எப் போலீசார் காயம்

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறி தாக்குதலில் 2 பி.எஸ்.எப். போலீசார் காயம் அடைந்தனர்.
பாதுகாப்புப் பணியில் வீரர்கள்
பாதுகாப்புப் பணியில் வீரர்கள்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்நிலையில், இன்று மாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெண்டார் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பி.எஸ்.எப் போலீசார் 2 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com