சொத்து தகராறு: தந்தை, வளர்ப்பு தாயை கோடரியால் வெட்டி கொன்ற சகோதரர்கள்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சொத்து தகராறு காரணமாக தந்தை மற்றும் வளர்ப்பு தாயை கோடரியால் வெட்டிக் கொன்ற சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
சொத்து தகராறு: தந்தை, வளர்ப்பு தாயை கோடரியால் வெட்டி கொன்ற சகோதரர்கள்
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஹரையா என்ற பகுதியை சேர்ந்தவர் ராம் ஹர்ஷ் சவுகான் (63). இவரது இரண்டாவது மனைவி சுனிதா தேவி (40).

சவுகானுக்கு ராஜேஷ் (34), ராஜேந்திரா (32) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சவுகானுக்கும் இவர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று இரவு இரு தரப்புக்கும் இடையே சொத்து தகராறு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சகோதரர்கள் அங்கிருந்த கோடரியால் சவுகானையும், சுனிதாதேவியையும் வெட்டிக் கொன்றனர். இதைத்தொடர்ந்து அவர்கள் உள்ளூர் போலீசில் சரணடைந்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com