காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி தப்பிச் செல்ல முயன்ற இரு பயங்கரவாதிகள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் மாவட்டத்துக்குட்பட்ட மூலு சித்ராகம் கிராமம் அருகே ராணுவத்தின் ராஷ்டரிய ரைபிள்ஸ் பிரிவை சேர்ந்த வீரர்கள் சாலையில் தடுப்பு வேலி போட்டு வாகனப் போக்குவரத்தை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.