கரூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

கரூர் அருகே தோட்டத்தில் ஆடு திருடிய நபர்கள் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கரூர்:

கரூர் அருகே புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 51). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். வடக்கு பாளையத்தில் உள்ள தனது தோட்டத்தில் 2 ஆடுகளை யாரோ திருடி சென்று விட்டதாக பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் மேலப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (20) புலியூர் அனீஸ் (20) ஆகிய இருவரும் ஆடு திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com