வடவள்ளி அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்- பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது

வடவள்ளி அருகே தம்பதி என கூறி வாடகைக்கு வீடு எடுத்து அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய பெண் புரோக்கர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கோவை:

கோவை வடவள்ளி சோமையம்பாளையம் அருகே உள்ள ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரேமா (வயது 35). மணிகண்டன் இறந்து விட்டார். பிரேமா தனது 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.

இவரது வீட்டின் மேல்பகுதி காலியாக இருந்தது. இதனை வாடகைக்கு விட பிரேமா திட்டமிட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வீட்டுக்கு தம்பதி என கூறி கோவில்பாளையம் அண்ணாநகரை சேர்ந்த நவீன்குமார், சஜிதா ஆகியோர் குடி வந்தனர்.

இவர்களது வீட்டுக்கு அடிக்கடி பகல் மற்றும் இரவு நேரத்தில் ஏராளமானோர் வந்து சென்றனர். இது பிரேமாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்களது வீட்டை நோட்டமிட்ட போது அழகிகளை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.

இது குறித்து அவர்களிடம் கேட்டபோது நீங்களும் விபசாரத்துக்கு வாருங்கள் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி பிரேமாவை விபசாரத்துக்கு இழுக்க முயன்றனர்.

இதில் அதிர்ச்சியடைந்த பிரேமா இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விபசார புரோக்கர்கள் நவீன்குமார், சஜிதா ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் தம்பதி என பொய் சொல்லி வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com