

இம்பால்:
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தில் பயணம் செய்வதற்காக 3 பெண்கள் இம்பால் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
அப்போது விமான நிலைய சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவர்கள் தங்கம் கடத்தியதை கண்டுபிடித்தனர். அவர்களிடமிருந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான 20 தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், கடத்தலில் ஈடுபட்ட 3 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். 3 பேரின் மீதும் கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.