

ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜம்மு காஷ்மீரில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றால் தங்களுக்கு நீதி கிடைக்காது என்றும், சண்டிகருக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று சிறுமியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் கோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்டு இன்று உத்தரவிட்டது.
இந்நிலையில், கதுவா மாவட்டத்தில் மேலும் ஒரு கற்பழிப்பு வழக்கு பதிவாகியுள்ளது. நேற்று கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அவரது டியூசன் ஆசிரியர் கற்பழித்துள்ளார். இதுகுறித்து போலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த டியூசன் ஆசிரியர் சஞ்சய் குமார் என்பவரை இன்று கைது செய்தனர். அவர் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. #kathuarape #jammukashmir