

தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மொத்தம் 5 யூனிட்டுகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு யூனிட்டுகளிலும் தலா 210 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு மொத்தம் 1050 மெகா வாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் 1-வது யூனிட்டில் ஏற்கனவே பழுது ஏற்பட்டு அதில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இங்குள்ள எந்திரங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டவை. இதனால் அடிக்கடி இதில் பழுது ஏற்படுகிறது. இந்நிலையில் 5-வது யூனிட்டில் நேற்று இரவு பழுது ஏற்பட்டது. இதனால் 420 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மின் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.