அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டி - இந்திய வம்சாவளி பெண் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் பதவிக்கு 2020-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடுவதாக ஜனநாயக கட்சியை சேர்ந்த துல்சி கபார்ட் அறிவித்துள்ளார். #TulsiGabbard #2020presidentialrun
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டி - இந்திய வம்சாவளி பெண் அறிவிப்பு
Published on

அமெரிக்காவில் வாழும் இந்து மக்களின் எண்ணிக்கை அந்நாட்டின் மக்கள்தொகையில் ஒருசதவீதமாக மட்டுமே உள்ள நிலையில் கடந்த 2016 பாராளுமன்ற தேர்தலில் 5 இடங்களில் இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றனர்.

இவர்களில் ஒருவரான கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று பரவலான எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ஜனநாயக கட்சியை சேர்ந்த துல்சி கபார்ட், 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து நான்காவது முறையாக ஹவாய் மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை (செனட்) உறுப்பினராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட துல்சி கபார்ட், அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அந்த நாட்டின் முதல் பெண் அதிபர் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த அதிபர் என்ற சிறப்பிடத்தை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், அதிபர் பதவிக்கான வேட்பாளராக அவரை முன்னிறுத்த அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஜனநாயக கட்சி பொறுப்பாளர்களின் ஆதரவை அவர் முன்னதாக பெற வேண்டியுள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com