60 நாட்கள் ‘கெடு’ முடிந்த நிலையில் டி.டி.வி.தினகரன் சுற்றுப்பயண திட்டம் அறிவிப்பு

டி.டி.வி.தினகரன் விதித்த 60 நாட்கள் ‘கெடு’ முடிந்த நிலையில், முதற்கட்டமாக 9 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். வருகிற 14-ந் தேதி மேலூரில் அவர் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
60 நாட்கள் ‘கெடு’ முடிந்த நிலையில் டி.டி.வி.தினகரன் சுற்றுப்பயண திட்டம் அறிவிப்பு
Published on

சென்னை:

டி.டி.வி.தினகரன் விதித்த 60 நாட்கள் ‘கெடு’ முடிந்த நிலையில், முதற்கட்டமாக 9 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். வருகிற 14-ந் தேதி மேலூரில் அவர் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

வருகிற 14-ந் தேதி - மதுரை மாநகர், புறநகர் மாவட்டம், மேலூர். 23-ந் தேதி - வடசென்னை வடக்கு மாவட்டம். 29-ந் தேதி - தேனி மாவட்டம், தேனி. செப்டம்பர் 5-ந் தேதி - கரூர் மாவட்டம், கரூர். செப்டம்பர் 12-ந் தேதி - தஞ்சாவூர் வடக்கு, தெற்கு மாவட்டம், தஞ்சாவூர்.

செப்டம்பர் 23-ந் தேதி - திருநெல்வேலி மாநகர், புறநகர் மாவட்டம், திருநெல்வேலி. செப்டம்பர் 26-ந் தேதி - தர்மபுரி மாவட்டம், தர்மபுரி. செப்டம்பர் 30-ந் தேதி - திருச்சி மாநகர், புறநகர் மாவட்டம், திருச்சி. அக்டோபர் 5-ந் தேதி - சிவகங்கை மாவட்டம், சிவகங்கை.

சசிகலா சார்பாக, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில், மேற்கண்ட பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com