திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் டி.டி.வி.தினகரன் தரிசனம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருவக்கரையில் வக்ரகாளியம்மன் கோவிலில் நேற்று அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சாமி தரிசனம் செய்தார்.
திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் டி.டி.வி.தினகரன் தரிசனம்
Published on

வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருவக்கரையில் புகழ்பெற்ற வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று இரவு 8 மணிக்கு அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வந்தார்.

அவரை கோவில் அர்ச்சர்கள் வரவேற்று கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். அவர் சந்திர மவுலீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். வலது புறத்தில் உள்ள குண்டலனி சித்தர் ஜீவ சமாதியில் சிறிது நேரம் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். அதன் பின்பு தேவநாத பெருமாள், நவக்கிரகங்கள், வடிவாம்பிகை உள்பட பல சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் வக்ரகாளியம்மன் சன்னதிக்கு சென்றார். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் மூலஸ்தானம் அருகே அமர்ந்து 30 நிமிடம் மவுனமாக இருந்து தியானம் செய்தார்.

கோவிலில் நடந்த கோ-பூஜையிலும் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com