திருமங்கலம் தொகுதிக்குள் தினகரன் நுழைய முடியாது: அமைச்சர் முன்னிலையில் நிர்வாகி ஆவேசம்

திருமங்கலம் தொகுதிக்குள் தினகரன் நுழைய முடியாது என்று அமைச்சர் உதயகுமார் முன்னிலையில் நிர்வாகி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமங்கலம் தொகுதிக்குள் தினகரன் நுழைய முடியாது: அமைச்சர் முன்னிலையில் நிர்வாகி ஆவேசம்
Published on

பேரையூர்:

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ரூ.11 கோடியே 36 லட்சத்தில் அரசு கலைக்கல்லூரி கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. வருகிற 7-ந்தேதி கல்லூரியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

முதல்-அமைச்சர் திருமங்கலம் வருகை குறித்து அ.தி.மு.க. தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நகர செயலாளர் விஜயன் பேசுகையில், தினகரனை நாங்கள் அரசியலில் இருந்து நீக்கி விட்டோம். அவருக்கும், கட்சிக்கும் என்ன தொடர்பு? கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் தினகரன், தைரியம் இருந்தால் திருமங்கலம் தொகுதிக்குள் நுழைந்து பார்க்கட்டும்.

நுழைந்தால் அவரது நிலை என்ன ஆகும் என்பதை காட்டுவோம் என்றார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அமைச்சர் உதயகுமார் பேசும்போது, பதவி ஆசை பிடித்த சிலர் வேண்டுமென்றே குழப்பம் செய்கின்றனர். அவர்கள் விரித்த விலையில் நம் சகோதரர்கள் சிக்கி இருக்கலாம். அவர்களை மீட்டு அரவணைக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com