வடகொரிய தலைவருடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கினார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. #TrumpKimSummit #USPresidentDonaldTrump
வடகொரிய தலைவருடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கினார் டிரம்ப்
Published on

பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது.  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள  கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  

உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும். இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
சந்திப்புக்கு பிறகு கருத்து தெரிவித்த டொனால்டு டிரம்ப் கிம் ஜாங் அன் - உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்ததாக கூறினார். மேலும், கிம் ஜாங் அன்னுடன் இணைந்து மிகப்பெரும் பிரச்சினை, குழப்பங்களுக்கு தீர்வு காண முடியும் என்றும், அணு விவகாரத்தை பொறுத்தவரை இணைந்து பணியாற்றி, அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் மற்றும் யூகங்களை கடந்து வந்துள்ளதாகவும் இந்த சந்திப்பானது அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் கிம் ஜாங் அன் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com