திருவாரூரில் லாரி மோதி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் பலி

திருவாரூரில் லாரி மோதி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

திருவாரூர்:

திருவாரூர் தென்றல் நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது52). இவர் சொந்தமாக லாரிகள் வைத்து டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை மகேந்திரன் மோட்டார் சைக்கிளில் திருவாரூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி அவர் மீது எதிர்பாராமல் மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com