வெள்ளகோவில் அருகே விபத்து: கணவன்-மனைவி பலி

வெள்ளகோவில் அருகே டிப்பர் லாரி கார் மீது மோதிய விபத்தில் கணவன்-மனைவி பலியாகினர்.
விபத்து
விபத்து
Published on

வெள்ளகோவில்:

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் சித்தேஸ்வரன்(51). டைல்ஸ் கம்பெனி வைத்து நடத்தி வந்தார்.

இவரது மனைவி தேவிகமலா(47). இவர்களுக்கு லத்திகா(16) என்ற மகளும், கோகன்(13) என்ற மகனும் உள்ளனர்.

சித்தேஸ்வரனின் தாயார் திருச்சியில் இறந்துவிட்டார். இதற்காக சித்தேஸ்வரன் குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றுவிட்டு நேற்று இரவு மீண்டும் கோவை திரும்பி கொண்டிருந்தார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வரும்போது எதிரே வந்த டிப்பர் லாரி கார் மீது மோதியது. இதில் காரில் இருந்த சித்தேஸ்வரன் உள்பட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து 4 பேரையும் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சித்தேஸ்வரன், அவரது மனைவி தேவிகமலா ஆகியோர் இறந்துவிட்டனர். லத்திகா, கோகன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com