திருவேங்கடம் அருகே லாரி மோதி விவசாயி பலி

திருவேங்கடம் அருகே லாரி மோதி விவசாயி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

திருவேங்கடம்:

திருவேங்கடம் அருகே உள்ள மருதாபுரி கீழத்தெருவை சேர்ந்தவர் வேல்ராஜ் (வயது 70). விவசாயி. இவர் சம்பவத்தன்று மொபட்டில் செவல்குளம் விலக்கில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் வந்த டிப்பர் லாரி, எதிர்பாராதவிதமாக வேல்ராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு டிப்பர் லாரி டிரைவர் நவநீதகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பாலமுருகனை (26) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com