ஒரே வேளையில் 250 கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின: உத்தரகாண்டில் பயங்கர விபத்து

உத்தரகாண்ட் மாநிலத்தில் லாரியில் தீபற்றியதால் ஒரே வேளையில் 250 கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறிய விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்ட்வானி - அல்மோரா தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரு பழங்கால பாலத்தின் மீது சென்ற சரக்கு லாரியில் இன்று திடீரென தீபிடித்தது. மளமளவென்று பரவிய தீயினால் பின்பக்கத்தில் இருந்த 250 சமையல் எரிவாய் சிலிண்டரகள் அடுத்தடுத்து வரிசையாக வெடித்து சிதறின.

விபத்துக்குள்ளான லாரிக்கு அருகாமையில் எந்த வாகனமும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் சிலிண்டர்கள் வெடித்த சப்தம் சுற்றுப்பட்டில் இருந்த பல கிராமங்களில் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகன போக்குவரத்தில் சிறிது நேரம் இடையூறு ஏற்பட்டது. லாரியின் ஒயரிங் இணைப்பில் ஏற்பட்ட மின்கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதும் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com