பாஜக விற்கு வாக்களித்ததால் இளம்பெண் அடித்துக் கொலை

திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. விற்கு வாக்களித்ததால் ஒரு இளம்பெண்ணை அவரது உறவினர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #TripuraPolls #womankilledforvotingBJP
பாஜக விற்கு வாக்களித்ததால் இளம்பெண் அடித்துக் கொலை
Published on

அகர்தலா:

திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வடக்கு திரிபுரா பகுதியை சேர்ந்த ஒரு பழங்குடியின இளம்பெண் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓட்டு போடாமல் பாஜக விற்கு ஓட்டு போட்டுள்ளாதாக தெரிகிறது.

இதனையறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் அவரை வீட்டில் வைத்து கண்மூடித் தனமாக தாக்கியுள்ளனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அப்பெண்ணை காப்பாற்ற வீட்டிற்குள் விரைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் இருவரும் தப்பியோடி விட்டனர். இதில் படுகாயமடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக் உயிரிழந்தார். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருக்கும் அந்த பெண்ணின் உறவினர்களை தீவிரமாக தேடி வருகின்றன்ர். பா.ஜ.க. விற்கு வாக்களித்ததால் இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TripuraPolls #womankilledforvotingBJP #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com