திருவல்லிக்கேணியில் போலீஸ்காரர் திடீர் மரணம்

திருவல்லிக்கேணியில் போலீஸ்காரர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவல்லிக்கேணியில் போலீஸ்காரர் திடீர் மரணம்
Published on

சென்னை:

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார் (26), போலீஸ்காரரான இவர் எழும்பூர் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்தார். மேன்சனில் தங்கி இருந்த அருண்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்வார்பேட்டையில் குடிபோதையில் போலீசாரிடம் சிக்கி சஸ்பெண்டு ஆனார்.

இந்த நிலையில் நேற்று மேன்சனுக்கு சென்றபோது வாசலிலேயே மயங்கி விழுந்து இறந்தார். இது பற்றி திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com