திருவல்லிக்கேணி பல்நோக்கு ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்குபோட்டு தற்கொலை

திருவல்லிக்கேணி பல்நோக்கு ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

சென்னை:

வியாசர்பாடி கிருஷ்ண மூர்த்தி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் அர்ஜுனன் (41). தமிழக அரசின் எழுது பொருள் துறையில் வேலை செய்து வந்த இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

அவர் திருவல்லிக்கேணியில் உள்ள பல்நோக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆஸ்பத்திரியில் 4-வது மாடியில் காலில் ஏற்பட்டிருந்த பிரச்சினைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் அங்குள்ள கழிவறையில் அர்ஜுனன் இன்று காலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருவல்லிக்கேணி போலீசார் விரைந்து சென்று அர்ஜுனனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் உள்ள சவக்கிடங்கில் வைத்தனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மற்ற நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்கொலை பற்றி ஆஸ்பத்திரி ஊழியர்கள், அர்ஜுனனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் அர்ஜுனனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com