திருவல்லிக்கேனி-மாங்காட்டில் 3 வீடுகளில் நகை கொள்ளை

திருவல்லிக்கேனி-மாங்காட்டில் 3 வீடுகளில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவல்லிக்கேனி-மாங்காட்டில் 3 வீடுகளில் நகை கொள்ளை
Published on

பூந்தமல்லி:

மாங்காடு நெல்லித் தோப்பு திருப்பதி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(52). போரூரில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி பிச்சம்மாள் (48) சென்னை எம்.ஜி.ஆர் நகரில் அரசு பள்ளி ஆசிரியராக உள்ளார்.

நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு இருவரும் பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 20 பவுன் தங்க நகை கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மாங்காடு நெல்லிமா நகரை சேர்ந்தவர் லட்சுமி (46). இவர் கடந்த 2-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு அய்யப்பன் தாங்கலில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். இன்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த 10 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 சம்பவங்கள் குறித்து மாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி கிழக்கு குளக்கரை தெருவை சேர்ந்தவர் சியாம்குமார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மகனின் நகைகளை வீட்டு பீரோவில் உள்ள லாக்கரில் வைத்திருந்தார்.

அவரது மனைவி நேற்று ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக நகைகளை எடுக்க பீரோவில் உள்ள லாக்கரை திறந்தார். அப்போது நகைகள் இருந்த பெட்டி மாயமாகி இருந்தது. அதை யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக ஐஸ் அவுஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com