கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் - யோகி ஆதித்யாநாத் வலியுறுத்தல்

முத்தலாக் முறை மூலம் விவாகரத்து செய்யப்பட்டவர்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டுமென உ.பி. முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
யோகி ஆதித்யாநாத்
யோகி ஆதித்யாநாத்
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் அம்மாநிலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறார்.

இந்நிலையில், இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ’முத்தலாக் முறை மூலம் விவாகரத்து செய்யப்பட்டவர்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு  ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.

சட்டரீதியாக அவர்களுக்கான நீதியும் நிவாரணமும் கிடைக்கும் வரை இந்த தொகை அளிக்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com