போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை 19-ந்தேதி சென்னையில் நடக்கிறது

அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் வருகிற 24-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தன. இந்நிலையில் 19-ந்தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை 19-ந்தேதி சென்னையில் நடக்கிறது
Published on

சென்னை:

ஊதிய உயர்வு, நிலுவைத் தொகையை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் வருகிற 24-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தன. மேலும் இதுதொடர்பாக அரசுக்கும், தொழிற்சங்கங்கள் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்தநிலையில், வருகிற 19-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அரசு தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை தனி துணை கமிஷனர் யாசின் பேகம் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com