மன்னார்குடி அருகே பெண்ணிடம் பலாத்காரம் செய்ய முயன்ற பக்கத்து வீட்டுக்காரர் கைது

வீடு புகுந்து பெண்ணிடம் பலாத்காரம் செய்ய முயன்ற பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.
மன்னார்குடி அருகே பெண்ணிடம் பலாத்காரம் செய்ய முயன்ற பக்கத்து வீட்டுக்காரர் கைது
Published on

திருவாரூர்:

மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டையை சேர்ந்தவர் பாஸ்கர்.இவரது மனைவி செல்வி (47). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் சென்னையில் தங்கி படித்து வருகின்றனர்.

பாஸ்கர் வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்து வருவதால் செல்வி தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி (56) என்பவர் நேற்று இரவு மதுபோதையில் செல்வியின் வீட்டுக்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி அவரை கண்டித்துள்ளார். இதனால் பயந்து போன கிருஷ்ணமூர்த்தி இதுபற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி செல்வி பரவாக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து கிரு‌ஷண்மூர்த்தியை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com