திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 24 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 24 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 24 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
Published on

மணப்பாறை:

திருச்சி மாவட்டம், மணப்பாறை அண்ணாவி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆதியான். நேற்று இவர் வீட்டை பூட்டி வீட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.

இன்று காலை ஆதியான் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்ததோடு, உடனடியாக ஆதியானின் மகன் மாரிமுத்துக்கு தகவல் கொடுத்தனர். தஞ்சாவூரில் இருந்த அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்வையிட்டார். அப்போது வீட்டின் பீரோவில் இருந்த 24 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்து. அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து மணப்பாறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com